இன்றைய பதிவில் நாம் அட்சய திருதியை அன்று எதை வாங்குவது நல்லது என்பதை பார்க்க போறோம்.
இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇
https://t.me/health_tips_tamil
மத்த நாட்களை விட அட்சய திருதியை அன்று தங்க நகைக் கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஏனென்றால் அட்சய திருதியை தினத்தன்று நகை வாங்கினால் அதிக நகை சேரும் என்று நிறைய பேர் நகை வாங்குகிறார்கள்.

ஆனால் தங்கத்தை விட பல மடங்கு சக்தியை பெற்றிருப்பது மகாலட்சுமி அம்சமான கல் உப்பு. இந்த கல் உப்பு சாதாரனமான பொருள் தான் என்று நினைக்க வேண்டாம். அட்சய திருதியை அன்று ஒரு கைப்பிடி உப்பு வாங்கி வைத்து வழிபட்டால் நமது வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். அட்சய திருதியை அன்று மளிகை கடைக்கு சென்று கல் உப்பு வாங்கி வந்து வீட்டில் அந்த உப்பு வைத்து சமைத்தால் போதும். இந்த நாளில் பணம் குடுத்து வாங்கும் கல் உப்புக்கு மிகுந்த சக்தி உண்டு.

கல் உப்பு வாங்கி வந்ததும் அதை எவர்சில்வர் பாத்திரத்திலோ அல்லது பிளாஸ்டிக் டப்பாவிலோ கொட்டுவதை தவிர்க்க வேண்டும். அட்சய திருதியை நாளில் கல் உப்புக்கு மகாலட்சுமிக்கு இனையான மரியாதையை குடுக்க வேண்டும். அதனால் மண் பாத்திரத்திலோ அல்லது பீங்கான் ஜாடிலோ வைத்து பூஜையில் வைக்க வேண்டும், அதன் பிறகு பூஜையை ஆரம்பிக்க வேண்டும். தெய்வத்திற்கு ஊதுபத்தி, கற்பூரம் காண்பிக்கும் போது உப்புக்கும் காண்பிக்க வேண்டும். இப்படி செய்தால் லட்சுமி தேவியின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
உப்பு வழிபாட்டை இவ்வாறு செய்யும் போது கடண் சுமை விரைவில் நீங்கும். பணவரவு அதிகரிக்கும். அட்சய திருதியை அன்று தானம் செய்வதும் நல்ல பலனை தேடித்தரும். பெரிய அளவில் தானம் செய்ய முடியவில்லை என்றாலும் சிறிய அளவில் ஒரு கிளாஸ் மோர் குடுத்தாலும் நல்ல பலன் கிடைக்கும். உணவு இல்லாமல் இருப்பவர்களுக்கு உணவு தரலாம்.
இந்த டவுட் உங்களுக்கு இருக்கா???