இன்றைய பதிவில் நாம் நாளுக்கு நாள் லாபம் அதிகரிக்கும் அதிக அளவி்ல் டிமாண்ட் உள்ள ஒரு சூப்பரான தொழிலைப் பற்றி பார்க்கலாம். இந்த தொழிலுக்கு அழிவே இல்லை. வாரம் 1 லட்சம் லாபம் தரக்கூடிய தொழில்.
KuKuFM கேளுங்க உங்க மனசுக்கு பிடித்த புத்தகத்தை ஆடியோ வடிவில்
KuKuFM Download Link:
https://kukufm.page.link/inhiWfmVEomLE92J6
Get a 50% discount on the annual description’ Coupon: BIT200
தொழில் :
இன்றைய பதிவில் நாம் பேப்பர் டியூப் தொழிலைப் பற்றி பார்க்கலாம். பேப்பர் டியூப் தொழிலுக்கு மார்க்கெட்டில் அதிக அளவு வரவேற்ப்பு உள்ளது.
உள்நாட்டில் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளுக்கும் இந்த பொருள் அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறார்கள்.
இந்த பேப்பர் டியூப் குறிப்பாக தையலுக்கு பயன்படுத்த கூடிய நூல் ரீவைண்ட் பன்ன அதிக அளவில் தேவைப்படுகிறது. சிறிய சிறிய நூலில் இருந்து பெரிய பெரிய நூல் கோன் வரைக்கும் ரீவைண்ட் பன்ன இந்த பேப்பர் டியூப் தான் தேவைப்படுது. அது மட்டும் இல்லாமல் துணிக்கடைகளில் இருக்கும் லைனிங், ஜாக்கெட் ரோல் பன்ன, பட்டாசு ஆலைகளில் பட்டாசு பேக் செய்ய தேவைப்படுகிறது.
இந்த தொழில் செய்வதன் மூலம் நாளுக்கு நாள் லாபம் அதிகமாக எடுக்கலாம். இப்போ இந்த தொழிலை ஆரம்பிக்க என்ன என்ன தேவைப்படுகிறது என்று பார்க்கலாம்.
இயந்திரம் :
பேப்பர் டியூப் தயார் செய்ய பேப்பர் டியூப் மேக்கிங் இயந்திரம் தேவைப்படுகிறது. இந்த இயந்திரத்தின் விலை 50,000 ஆயிரத்தில் இருந்து 3.50 லட்சம் வரைக்கும் விற்கப்படுகிறது.
மூலப்பொருள் :
பேப்பர் டியூப் தயார் செய்ய பழைய பேப்பர், அட்டை தேவைப்படுகிறது.
வருமானம் :
பேப்பர் டியூப் இயந்திரம் செமி ஆட்டோமெடிக் இயந்திரம் வாங்குகிறீர்கள் என்றால் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேப்பர் டியூப் தயார் செய்யலாம். பேப்பர் டியூப் தடிமன் பொருத்து விற்கப்படுகிறது. ஒரு வாரத்திற்கு ஒரு லட்சம் பேப்பர் டியூப் தயாரித்து விற்பனை செய்கிறீர்கள் என்றால் 1,00,000 லாபம் எடுக்கலாம்.
முதலீடு :
இயந்திரம், மூலப்பொருள் எல்லாம் சேர்த்து ஆரம்பத்தில் 3,00,000 முதலீடு செய்ய வேண்டும். 10×10 அளவில் இடம் இருந்தால் போதும்.
விற்பனை :
தயார் செய்த பேப்பர் டியூப் நூல் தயார் செய்யும் இடங்களில், அகர்பத்தி பேக் செய்யும் இடங்களில், பட்டாசு பேக் செய்யும் இடங்களில் விற்பனை செய்யலாம்.