70 வயதிலும் Easyயா மாதம் 70,000ரூ கை நிறைய சம்பாதிக்கலாம்

70 வயதிலும் Easyயா மாதம் 70,000ரூ கை நிறைய சம்பாதிக்கலாம்

வணக்கம் நண்பர்களே..!

இன்றைய பதிவில் நாம் பார்க்கும் தொழிலை ஆரம்பிக்க எந்த விதமான இயந்திரமும் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் ரொம்பவும் எளிமையா வீட்டில் இருந்தே செய்யலாம். அதிக அளவில் தேவையுள்ள பொருள்தான். நாம் தயார் செய்ய போகும் பொருளில் அதிக அளவில் நன்மை இருக்கிறது. முதலீடாக 500ரூ இருந்தால் போதும் இப்போ இந்த தொழில் என்ன என்ன என்ன மூலப்பொருள் தேவைப்படுகிறது என்று முழு விவரம் இப்போது பார்க்கலாம்.

தொழில்:

இந்த பதிவில் நாம் பார்க்க போகும் தொழில் நெல்லிக்காய் மிட்டாய் (Amla Candy) தொழிலைப் பற்றி பார்க்கலாம். நெல்லிக்காய் வைத்து இனிப்பான உடலுக்கு பல ஆரோக்கியம் தரக்கூடிய நெல்லிக்காய் மிட்டாய் தயார் செய்யும் தொழில் தான் இது. இந்த தொழிலை ஆரம்பிக்க எந்த விதமான இயந்திரமும் தேவையில்லை.

எல்லாருக்குமே நன்றாக தெரிஈயும் நெல்லிக்காயில் எவ்வளவு சத்துக்தெரியுமா கிறது என்று, ஆனால் நெல்லிக்காயின் சுவை பலருக்கும் பிடிப்பதில்லை. அதுவே நெல்லிக்காயில் சுவையான நெல்லிக்காய் மிட்டாய் தயார் செய்து விற்பனை செய்யும் போது மக்கள் விரும்பி வாங்குவார்கள்.

குழந்தைகளுக்கு ஆரோக்கியம் குறைவான மிட்டாய் வாங்கி தராமல், ஆரோக்கியம் நிறைந்த நெல்லிக்காய் மிட்டாய் வாங்கி குடுக்கலாம். இப்போ இந்த தொழிலை எ‌வ்வாறு செய்யலாம், என்ன என்ன தேவை என்று முழு விவரம் பார்க்கலாம்.

நெல்லிக்காயில் இருக்கும் சில நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

👉 பசி உணர்வை தூண்டுகிறது.

👉 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

👉 முடி உதிர்வதை தடுத்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

தேவையான மூலப்பொருட்கள்:

நெல்லிக்காய்

வெல்லம் அல்லது சர்க்கரை

நெல்லிக்காய் 2 கிலோ எடுக்கும் போது வெல்லம் அல்லது சர்க்கரை 1600கிராம் எடுக்க வேண்டும்.

தயார் செய்யும் முறை:

முதலில் நெல்லிக்காய் வாங்கி நன்றாக கழுவி ஒரு கடாயில் நெல்லிக்காய் சேர்த்து பிறகு நெல்லிக்காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். பிறகு அதில் இருக்கும் கொட்டை நீக்கி கட் பண்ண வேண்டும்.

பிறகு அதில் தேவையான அளவு வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கி காயவைத்து எடுத்தால் நெல்லிக்காய் மிட்டாய் தயார். தயார் செய்த நெல்லிக்காய் மிட்டாயை பேக் செய்து விற்பனை செய்யலாம்.

வருமானம் :

1 கிலோ நெல்லிக்காய் மிட்டாய் 400ரூ வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கி 10 கிலோ விற்பனை செய்கிறீர்கள் என்றால் 4000ரூ வருமானம் எடுக்கலாம்.

விற்பனை இடம் :

தயார் செய்து வைத்துள்ள நெல்லிக்காய் மிட்டாயை சிறிய சிறிய கடைகளில், மளிகை கடைகளில், சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில், ஆன்லைனில் விற்பனை செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *