500 ரூ முதலீட்டில் பல மடங்கு லாபம் தரும் தொழில். ரகசியமாக நடக்கும் தொழில்!!!

500 ரூ முதலீட்டில் பல மடங்கு லாபம் தரும் தொழில். ரகசியமாக நடக்கும் தொழில்!!!

இன்றைய பதிவில் நாம் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய ஒரு அருமையான தொழிலை பற்றி பார்க்கலாம். இந்த தொழிலை பற்றி நிறைய நபர்களுக்கு தெரியாது. இந்த பொருளுக்கு மார்க்கெட்டில் அதிக அளவு தேவை இருக்கு. இந்த தொழிலில் நாம் எல்லா சீசனிலும் கிடைக்க கூடிய பொருளை வாங்கி மதிப்புக் கூட்டி விற்பனை செய்ய போறோம். ஒரு பொருளை மதிப்புக் கூட்டி விற்பனை செய்யும் போது அந்த பொருளில் அதிக லாபம் கிடைக்கிறது.

இன்றைய பதிவில் நாம் கருப்பு எலுமிச்சை தொழிலை பற்றி பார்க்கலாம். ஈசியா கிடைக்கும் எலுமிச்சைப் பழம் வாங்கி மதிப்பு கூட்டி அதிக லாபம் வைத்து விற்பனை செய்யப்போறோம்.

தயார் செய்யும் முறை :

முதலில் எலுமிச்சைப் பழம் வாங்கி தண்ணீர் கொதிக்க வைத்து 1 கிலோ எலுமிச்சைப் படத்துக்கு 1 ஸ்பூன் அளவில் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி அந்த நீரில் எலுமிச்சைப் பழத்தை சேர்த்து 10நிமிடம் சேர்த்து வேகவைக்க வேண்டும். பிறகு எலுமிச்சைப் பழத்தை எடுத்து குளிர் நீரில் சேர்த்து சிறிது நேரம் கழித்து ஒரு சுத்தமான நீரில் துடைத்து எடுக்க வேண்டும். அடுத்ததாக காய வைக்க வேண்டும். இதற்கு நிறைய வகை இருக்கு. வெயிலில் காய வைக்கலாம், சோலாரில் காய வைக்கலாம், நிறைய வகை இருக்கு. ஆனால் முதலில் நாம் முதலீடு அதிகமாக செய்ய தேவையில்லை அதனால் சூரிய ஒளியில் காயவைத்தால் போதும். இவ்வாறு காய வைக்கும் போது ஒரு வாரம் காய வைக்க வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்படும் கருப்பு எலுமிச்சை ஒரு கிலோ 600ரூ வரைக்கும் விற்பனை செய்கிறார்கள். கருப்பு எலுமிச்சை தயார் செய்து பவுடராக தயாரித்து 1000ரூ முதல் 1500ரூ வரை விற்பனை செய்கிறார்கள். அந்த அளவுக்கு அதிகமாக மருத்துவ குணம் உள்ளது.

இந்த தொழிலுக்கு FSSAI லைசன்ஸ் தேவைப்படுகிறது.

முதலீடு :

1 கிலோ தயார் செய்ய 3 கிலோ எலுமிச்சை பழம் தேவைப்படுகிறது. 1 கிலோ தயார் செய்ய 175 ரூ செலவு ஆகிறது.

லாபம் :

1 கிலோ 600 ரூ விற்பனை செய்தாலும் 1 கிலோவிற்கு 425 ரூ லாபம் கிடைக்கிறது. ஒரு நாளைக்கி 5 கிலோ விற்பனை செய்வதன் மூலம் 2125 ரூ லாபம் கிடைக்கிறது.

விற்பனை இடம் :

தயார் செய்த இந்த பொருளை ஓட்டல், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில், மளிகை கடையில், ஆன்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *