வீட்டில் எத்தனை விளக்கு ஏற்றினால் குடும்பம் செல்வ செழிப்புடன், நல்ல வளர்ச்சியும் இருக்கும்….

இன்றைய பதிவில் நாம் வீட்டில் விளக்கேற்றும் முறை பற்றி பார்க்கலாம். நிறைய பேருக்கு வீட்டில் ஒரு விளக்கு ஏற்றலாமா அல்லது இரண்டு விளக்கு ஏற்றலாமா என்ற சந்தேகம் இருக்கும்.

இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇

https://t.me/health_tips_tamil

வீட்டில் எந்த விளக்கு ஏற்றலாம்:-

நாம் வீட்டில் எந்த விளக்கு ஏற்றினாலும் சரி அஷ்டலட்சுமி விளக்கு, காமாட்சி அம்மன் விளக்கு என்று எந்த விளக்கு பயன்படுத்தினாலும் சரி அந்த விளக்கு கூட அகல் விளக்கு ஏற்றுவது நல்லது.

அகல் விளக்கு என்பது எளிமையின் அடையாளமாக உள்ளது. அகல் விளக்கு ஏற்றி வழிபடும் போது கூடுதல் நன்மைகள் கிடைக்கிறது.

விளக்கு சுடர் எத்தனை ஏற்றலாம்:-

விளக்கு ஏற்றும் போது மூன்று சுடர்கள், ஐந்து சுடர்கள், ஏழு சுடர்கள் இருக்க வேண்டும். அதாவது மூன்று விளக்குகள், ஐந்து விளக்குகள், ஏழு விளக்குகள் ஏற்ற வேண்டும்.

வீட்டில் குத்து விளக்கு ஏற்றினால் இரண்டு முகம் மட்டுமே ஏற்ற வேண்டும். திருமணம், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் விசேஷ நாட்களில் ஐந்து முகம் ஏற்றலாம். மற்ற சாதாரன இறை வழிபாடு நாட்களில் இரண்டு முகம் ஏற்றுவது நல்லது.

விளக்கு ஏற்ற உகந்த எண்ணெய் :-

விளக்கு ஏற்றும் போது நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றினால் ரொம்பவே நல்லது. பஞ்ச தீப எண்ணெய், மூன்று எண்ணெய் சேர்ந்தது இது எல்லாம் பயன்படுத்தக்கூடாது. நல்லெண்ணெய் பயன்படுத்துவது நல்லது.

விளக்கு திரியாக பஞ்சு திரி பயன்படுத்தலாம். நூல் திரி பயன்படுத்தினால் இரட்டையக பயன்படுத்தலாம். விளக்கு ஏற்றும் போது புதிதாக திரி பயன்படுத்த வேண்டும்.

தீபத்தை குளிர் வைக்கும் போது பூவால் குளிர வைக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *