இன்றைய பதிவில் நாம் பார்க்க போகும் தொழிலுக்கு அதிக அளவில் மார்க்கெட்டில் டிமாண்ட் உள்ளது. இந்த தொழிலுக்கு போட்டியே இல்லை. குறைவான முதலீட்டில் அதிக லாபம் எடுக்கலாம். அதிகமாக முதலீடு செய்ய முடியாதவர்கள் இந்த தொழிலை தாராளமாக செய்யலாம்.
இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇
https://t.me/health_tips_tamil
இன்றைய பதிவில் நாம் பிராஸ் மற்றும் காப்பர் ( Brass and Copper Cleaning Powder Making Business) சுத்தம் செய்யும் பவுடர் தயாரிப்பு தொழிலை பற்றி பார்க்கலாம். இந்த பவுடர் நாம் கடைகளில் வாங்கி இருப்போம். பித்தளை பாத்திரம் பூஜை பொருட்களை பளபளப்பாக கழுவி பளிச்சுனு வைத்திருக்க உதவுகிறது. இந்த பவுடர் தயாரித்து விற்பனை செய்யும் போது அதிக லாபம் எடுக்கலாம்.
பித்தளை பாத்திரம் மட்டும் இல்லாமல் Copper, Brass, Aluminium, Iron, Silver, Steel இந்த பொருட்கள் அனைத்தையும் சுத்தமாக பளிச்சுனு கழுவ பயன்படுகிறது. பவுடராக மற்றும் இல்லாமல் லிக்வீடாகவும் தயாரித்து விற்பனை செய்கிறார்கள். இன்றைய பதிவில் நாம் பவுடரை எப்படி தயாரித்து விற்பனை செய்யலாம் என்று பார்க்கலாம்.
லைசன்ஸ் :
GST,
Trade Mark Registration,
Register Company name.
தேவையான மூலப்பொருட்கள் பொருட்கள் :
சோடியம் மெட்டோ சிலிகேட், சிட்ரிக் ஆசிட், சோடியம் கார்பனேட், சைனா கிலே இந்த பொருட்களை கொண்டு தயாரிக்கலாம்.
ஒரு கிலோ தயாரிக்க எவ்வளவு அளவு சேரக்கலாம் என்று பார்க்கலாம்.
சோடியம் மெட்டோ சிலிகேட் = 200 கிராம்,
சிட்ரிக் ஆசிட் = 50கிராம் ,
சோடியம் கார்பனேட் = 250 கிராம்,
சைனா கிலே = 500 கிராம்
இந்த அளவி்ல் சேர்க்க வேண்டும். இந்த பவுடர் அதிகமாக ரோஸ் நிறத்தில் இருக்கும். நமக்கு தேவைப்பட்டால் ரோஸ் நிறத்தில் தயாரிக்கலாம், இல்லை என்றால் நீலம், பச்சை நிறத்தில் உள்ள கலர் சேர்த்து விற்பனை செய்யலாம்.
வருமானம்:
ஒரு கிலோ தயாரிக்க 100 ரூ செலவு ஆகிறது. ஆனால் மார்க்கெட்டில் 200 கிராம் 60 ரூபாய்க்கு, 1 கிலோ 520 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். தினமும் 25 கிலோ விற்பனை செய்வதன் மூலம் 13,000 லாபம் எடுக்கலாம்.
விற்பனை இடம் :
தயாரித்த இந்த பொருளை சிறிய சிறிய பெட்டி கடைகளில், மளிகை கடைகளில், சூப்பர் மார்க்கெட்டில், ஆன்லைன் கடைகளில், கோவில் சம்மந்தமான இடங்களில் விற்பனை செய்யலாம்.