முகம் கழுவும் போது கண்டிப்பா இந்த தவறுகளை செய்யக்கூடாது !!!

முகம் கழுவும் போது கண்டிப்பா இந்த தவறுகளை செய்யக்கூடாது !!!

முகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள அனைவரும் அடிக்கடி முகத்தை தண்ணீரால் கழுவுவது வழக்கம். அப்படி முகத்தை கழுவும் போது சில சிறிய சிறிய தவறுகளை செய்கிறோம். அந்த தவறுகளினால் நமது முகத்தில் முகப்பரு போன்ற சருமப்பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே நாம் எவ்வாறு முகத்தை கழுவ வேண்டும் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.

👉 முகத்தை துடைக்கும் போது துண்டைப் பயன்படுத்தி அழுத்தி துடைக்க கூடாது. பருத்தியால் ஆன துண்டை பயன்படுத்தி மென்மையாக துடைக்க வேண்டு்ம்.

👉 நாம் கைகளை கழுவாமல் முகத்தை கழுவும் போது கைகளில் உள்ள அழுக்குகள் முகத்தில் நேரடியாக பட்டு முகப்பரு, கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனை முகத்தில் ஏற்படுகிறது. எனவே நாம் முகத்தை கழுவும் போது முதலில் கைகளை சுத்தமாக தேய்த்து கழுவ வேண்டும்.

👉 முகத்தை கழுவும் போது சூடான நீரை பயன்படுத்தாமல், வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தி முகத்தை கழுவும் போது முகத்தில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்கும்.

👉 முகத்தில் பருக்கள் உள்ளவர்கள் முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும். இதனால் முகத்தில் அழுக்குகள், எண்ணை பசை வெளியேறி முகம் பளபளப்பாக சுத்தமாக இருக்கும்.

👉 எப்போதும் தலைக்கு குளித்தால், குளித்து முடிந்ததும் கடைசியாக முகத்தை கழுவ வேண்டும். இதனால் தலையில் இருந்து வரும் அழுக்குகள், பொடுகுகள் முகத்தில் தங்கியிருப்பதை தடுத்து சருமப் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.

👉 நிறைய நபர்கள் முகம் வெள்ளையா இருக்க கிரீம்களை பயன்படுத்துவார்கள். அது நல்லது அல்ல. அதற்கு பதிலாக இயற்கை முறையில் வீட்டிலே தயார் செய்த பவுடரை கிரீமாக பயன்படுத்தலாம்.

👉 முகத்தில் மேக்கப் போட்டிருந்தால் மேக்கப்பை கலைத்து பிறகுதான் முகத்தை கழுவ வேண்டும். இல்லையெனில் அழுக்குகள் முகத்தில் இருக்கும் சரும துளைகளில் தங்கி முகப்பரு ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *