நீங்கள் டயட்டே இல்லாமல் உடல் எடையை குறைக்க சூப்பரான வழிகள்!!!

நீங்கள் டயட்டே இல்லாமல் உடல் எடையை குறைக்க சூப்பரான வழிகள்!!!

இன்றைய காலத்தில் உடல் பருமன் என்பது பல பேருக்கு பிரச்சனையாக உள்ளது. உடல் எடை குறைக்க நிறைய டயட், உடற்பயிற்ச்சி என்று பல முயற்ச்சிகளில் ஈடுபடுகின்றனர். கடுமையான டயட் இருப்பதால் பசியுடன் பல உணவுகளை நாம் ருசிக்காமல் இருக்கிறோம். இதனால் உடல் எடை குறைந்து மறுபடியும் எடை கூடும். அப்படி அனைத்து உணவையும் சாப்பிட்டு, உடல் எடையை குறைக்க முடியும். அதற்கு நாம் வாழ்க்கையில் சில மாற்றங்களை செய்தால் போதும். இப்போது அந்த வழிகளை பற்றி பார்க்கலாம்.

காலை உணவு :

தினமும் காலை உணவை கட்டாயம் உண்ண வேண்டும். காலை உணவை தவிர்த்தால் பசியானது மற்ற வேளைகளில் அதிகமாக தூண்டுகிறது. இதனால் உடல் எடை கூடுகிறது. அதனால் காலை உணவை தவிர்க்கலாம் ஒரு கிண்ணம் பழங்கள் மற்றும் ஓட்ஸ் சேர்த்து ஒன்றாக கலக்கி தினமும் காலையில் சாப்பிட்டு வர எடை குறையும்.

அதிக அளவில் காய்கறிகள்:

தினமும் இரவில் அதிகமான காய்கறிகள், மற்றும் பழங்கள் உண்டு உடல் எடையை குறைக்கலாம்.

நன்றாக தூங்கவும்:

தினமும் ஒரு மணி நேரம் கூடுதலாக தூங்கினால், சுலபமாக கலோரிகளை எரித்து எடை குறையும்.

தண்ணீர்:

சர்க்கரை மற்றும் சோடா கலந்த பானங்களை தவிர்த்து தண்ணீர் அல்லது பழச்சாறுகளை பருகலாம்.

சைவ உணவு:

அசைவ உணவு உண்ணுபவர்களை விட சைவ உணவு உண்ணுபவர்கள் தான் வேகமாக ஒல்லியாவார்கள். சைவ உணவு உட்கொண்டால் உடல் எடை குறைய உதவுகிறது.

கிரீன் டீ:

தினமும் கிரீன் டீ பருகுவதால் உடல் எடை குறையும்.

உணவிற்கு முன் பழங்கள்:

வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடும் போது உடலின் நச்சுத்தன்மை நீங்கி, அதிக ஆற்றல் கிடைத்து உடல் எடை குறையும்.

உணவு தட்டு:

உண்ணும் உணவின் தட்டு குறைந்தால் தானாகவே உண்ணும் உணவின் அளவு குறையு‌ம்.

நன்றாக மென்று உண்ணவும்:

சாப்பிடும் போது ஒவ்வொர வாய் உணவையும் நன்றாக மென்று உண்ண வேண்டு்ம். நன்றாக மென்று உண்ணும் போது உடல் எடை குறைக்க வழியாகும்.

வீட்டு உணவு:

உடல் எடை குறைப்பவர்களின் முக்கிய இரகசியம் வீட்டில் சமைத்து உண்ணுவது. வீட்டில் சமைத்து உண்ணும் போது உடல் எடை கூடுவதை தவிர்க்கலாம்.

உண்ணும் அளவு:

நீங்கள் உண்ணும் உணவின் அளவு 20% வரை குறைத்து, உணவின் அளவு கட்டுப்பாட்டில் வைத்தால் உடல் எடை தானாக குறையு‌ம்.

மதுபானம்:

மதுபானத்தில் கலோரிகள் தான் அதிகமாக உள்ளது. மது அருந்துவதால் சுய கட்டுப்பாட்டை இழந்து இதர நொறுக்குத் தீனியை உட்கொள்ள வைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *