இன்றைய பதிவில் நாம் எந்த விதமான இயந்திரமும் இல்லாமல், கடை இல்லாமல் சிறிய முதலீட்டில் வீட்டில் இருந்தே செய்யக்கூடிய சூப்பரான தொழிலை பற்றி பார்க்கலாம். இந்த பதிவில் நாம் பார்க்க போகும் பொருளை தயார் செய்ய 100 ரூபாய் செலவு ஆகிறது என்றால் அந்த பொருளை பல மடங்கு லாபம் வைத்து விற்பனை செய்யலாம்.
தொழில் :
இந்த பதிவில் நாம் வாழைக்காய் பவுடர் தயாரிப்பு தொழிலை பற்றி பார்க்கலாம். வாழைக்காய் பவுடரை Raw Banana powder என்றும் அழைப்பார்கள். இந்த பவுடரில் நிறைய நன்மைகள் உள்ளது.
வாழைக்காய் பவுடர் உணவுப்பொட்கள் தயார் செய்யும் இடங்களில், ஐஸ்கிரீம் தயார் செய்ய, அழகு சாதனப் பொருட்கள் தயார் செய்யும் இடங்களில் பயன்படுகிறது.
தயாரிக்கும் முறை :
வாழைக்காய் தான் இதற்கு முக்கிய மூலப்பொருளாக தேவைப்படுகிறது. வாழைக்காய் எடுத்து தோல் நீக்கி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி நன்றாக காய வைக்க வேண்டும். பிறகு நைசாக அரைத்து பேக் செய்து விற்பனை செய்யலாம்.
வாழைக்காய் பொடி தயார் செய்ய இயந்திரமும் இருக்கு. Food dehydrator machine உள்ளது. இந்த இயந்திரத்தின் ஆரம்ப விலை 4,000 ரூபாயில் இருந்து கிடைக்கிறது. இயந்திரத்தின் மூலம் தொழில் செய்கிறீர்கள் என்றால் இயந்திரம் வாங்கி தொழிலை ஆரம்பிக்கலாம்..
வருமானம்:
1 கிலோ பவுடர் தயார் செய்ய 100 ரூ செலவு ஆகிறது. விற்கும் விலை 300 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். 1 கிலோ 500 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். 1 கிலோவிற்கு 400 ரூபாய் லாபம் கிடைக்கிறது.
தினமும் 5 கிலோ விற்பனை செய்வதன் மூலம் 2000 ரூ லாபம் எடுக்கலாம்.