வணக்கம் நண்பர்களே..!
இன்றைய பதிவில் நாம் கடுமையான கண் திருஷ்டி யையும் சில எளிய முறையில் எவ்வாறு சரி செய்யலாம் என்று பார்க்கலாம். நிறைய நபர்கள் கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். எல்லாருமே எளிமையான முறையில் இவ்வாறு செய்தால் கண் திருஷ்டி காணாமல் போகும்.
👁 வாரம் ஒரு முறை குளிக்கும் நீரில் கல் உப்பு சேர்த்து கலந்து குளிக்கலாம்.
👁 பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்ப்பு அறையில் வைக்கலாம்.
👁 எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி ஒரு புறம் மஞ்சளும், மறு புறம் குங்குமம் தடவி வாசலில் இரு புறம் வைக்கலாம்.
👁 வாசலில் கற்றாழை, மஞ்சள், ரோஜா, சப்பாத்திக்கள்ளி இவற்றை வளர்க்கலாம்.
👁 மீன் தொட்டியில் சிவப்பு, கருப்பு நிறத்தில் இருக்கும் மீன்களை வளர்க்கலாம்.
👁 கண் திருஷ்டி கணபதி படம் வைக்கலாம்.
👁 குங்குமம் கலந்த நீர் மற்றும் வெற்றிலை மீது எரியும் கற்பூரம் இவற்றிற்கு தீய சக்தி விரட்டும் ஆற்றல் அதிகம்.