உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய, உடல் வெப்பத்தை தணிக்கும் பானங்கள்…

கோடை காலத்தில் உடல் வறட்சியாகிறது. கோடை காலத்தில் தண்ணீர் அதிகமாக பருக வேண்டும். உடல் வெப்பத்தை தணிக்க பழங்களால் செய்யப்பட்ட பானங்கள், இயற்கை பானங்கள் குடிப்பதும் உடலுக்கு நல்லது. அவ்வாறு சில பானங்களை பற்றி இங்கே பார்க்கலாம்.

இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇

https://t.me/health_tips_tamil

இளநீர்:

உடல் சூடு, வயிற்றுப் புண், வாய்ப்புண் என எல்லாவற்றையும் சரி செய்ய இளநீர் சிறந்து விளங்குகிறது. இளநீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் குளிர்ச்சியுடன் ஆரோக்கியமாக இருக்கும்.

மோர்:

வெயில் காலத்தில் அடிக்கடி மோர் அருந்துவதன் மூலம் உடல் வெப்பம் மற்றும் உடல் வறட்சியை தடுத்து, செரிமான பிரச்சனையை சரிசெய்ய உதவுகிறது.

தர்பூசணி:

தர்பூசணி சாப்பிட்டு வந்தால், அதில் இருக்கும் நீர்ச்சத்து உடலில் இருக்கும் வெப்பம் தணிந்து, உடல் வறட்சியை போக்க உதவுகிறது.

புதினா:

உடல் வெப்பத்தை தணிக்க புதினா பெரிதும் உதவுகிறது. உடல் வெப்பம் உள்ளவர்கள் புதினா ஜூஸ் செய்து குடித்து வந்தால் உடல் வெப்பம் குறையும் ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.

எலுமிச்சை:

எலுமிச்சை ஜுஸ் குடிப்பதால் உடல் சூட்டை தணித்து, உடல் சூடு சம்மந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

நீர்:

அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு டம்ளர் நீராவது குடிக்க வேண்டும். இவ்வாறு குடிக்கும் போது உடல் வறண்டும் போகாமல் தடுக்கிறது.

வெள்ளரிக்காய்:

வெள்ளரிக்காயில் அதிக நீர்ச்சத்து உள்ளது. வெள்ளரிக்காய் சாப்பிடுவதன் மூலம் உடல் ஈரப்பதத்துடன் இருக்கிறது. இதனை அப்படியே சாப்பிடலாம், இல்லை என்றால் ஜூஸ் போட்டும் குடிக்கலாம்.

முலாம் பழம்:

முலாம் பழம் அதிக குளிர்ச்சி தன்மை உடையது. உடல் வெப்பத்தை தணிக்கும் பழங்களில் முலாம் பழம் முக்கியமானது.

கோடை வெயிலில் இருந்து தப்பிக்க:-

கோடைக்காலத்தில் பருத்தி ஆடைகளை உடுத்தலாம்.

அவ்வப்போது தண்ணீர், இளநீர், மோர், பழச்சாறு குடிக்கலாம்.

வெளியில் செல்லும் போது குடை பயன்படுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *