இனி ருசியான ஆம்பூர் பிரியாணி வீட்டிலே செய்து அசத்தலாம்!!!

இனி ருசியான ஆம்பூர் பிரியாணி வீட்டிலே செய்து அசத்தலாம்!!!

ஆம்பூர் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் :

சீரக சம்பா – ஒரு கிலோ

சிக்கன் அல்லது மட்டன் – ஒரு கிலோ

இஞ்சி, பூண்டு – 300 கிராம்

பட்டை, லவங்கம் – தேவையான அளவு

ஏலக்காய் – 3

பிரிஞ்சி இலை – 2

பெரிய வெங்காயம் – கால் கிலோ

தக்காளி – 200 கிராம்

தயிர் – 150 கிராம்

எலுமிச்சம்பழம் – ஒன்று

பச்சை மிளகாய் – 5

காய்ந்த மிளகாய் – 5

எண்ணெய் – 250 கிராம்

நெய் – 2 ஸ்பூன்

கொததமல்லி, புதினா – ஒரு கைப்பிடி

உப்பு – தேவையான அளவு

செய்முறை :

காய்ந்த மிளகாய் எடுத்து நீரில் ஊறவைத்து பேஸ்டாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

இஞ்சி, பூண்டு இரண்டையும் மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.

அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும், எண்ணெய் காய்ந்த காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்க்கவும். அதில் பச்சை மிளகாய் சேர்த்து வெடித்ததும், வெங்காயம் சேர்த்து வதக்கவும். அத்துடன் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். வதங்கிய பிறகு அரைத்து வைத்த மிளகாய் பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

பிறகு அதனுடன் தக்காளி, உப்பு சேர்த்து வதக்கிய பிறகு சிக்கன் அல்லது மட்டன் சேர்த்து வதக்கவும்.

அதன் பின்னர் தயிர், புதினா, கொத்தமல்லி சேர்த்து சிக்கன் அல்லது மட்டன் சேர்த்து வதக்கி சிறிது எலுமிச்சை சாறு கலந்து 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

தண்ணீர் கொதித்த பிறகு கழுவி வைத்த அரிசியை சேர்த்து மெதுவாக கலக்கி அரிசி வெந்ததும், நெய் சேர்த்து இறக்கினால் சூப்பரான சுவையான ஆம்பூர் பிரியாணி தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *