இந்த உயிரினங்கள் உங்கள் வீட்டிற்குள் நுழைந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகுது!!!

இயற்கை என்பது இறைவனால் படைக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய அற்புதம். நம்மை சுற்றி இயற்கையாக பல உயிரினங்கள், செடி, கொடிகள் தோன்றுகிறது. உயிரினங்கள் சந்தோஷமாக சுற்றி திரிகிறது. சில சமயம் உயிரினங்கள் நம் வீட்டை தேடி வருகிறது. உயிரினங்களுக்கு எதிர் காலத்தில் நடக்க இருப்பதை முன் கூட்டியே தெரியும் ஆற்றலை இறைவன் படைத்திருக்கிறார். நமக்கு எதிர்காலத்தில் என்ன நடக்க போகிறது என்பதை தெரிவிக்கவே உயிரினங்கள் நம் வீட்டிற்கு வருகிறது. அவ்வாறு வீட்டிற்குள் வரக்கூடிய உயிரினங்கள் எதற்காக வருகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇

https://t.me/health_tips_tamil

அதிர்ஷ்டம் தருபவை:-

சிட்டுக்குருவி:-

சிட்டுக்குருவி வீட்டிற்குள் அரிதாகவே நுழையும். சிட்டுக்குருவி நுழையும் போது நாம் விரட்டக்கூடாது, சிட்டுக்குருவி நுழைந்தால் நமக்கு அதிர்ஷ்டம் வரும்.

ஆந்தை :-

மற்ற பறவைகளை விட ஆந்தை நாம் பயமாக பார்க்கிறோம். உண்மையில் ஆந்தை லட்சுமி தேவியின் அருகில் இருக்கும் உயிரினம். அதனால் ஆந்தை நம் வீட்டிற்குள் வந்தால் பயப்பட தேவையில்லை, அதிர்ஷ்டம் தான் வரும்.

பல்லி :-

சிலருக்கு பல்லியை கண்டாலே பிடிக்காது, விரட்டி விடுவார்கள். அந்த தவற நாம் செய்யக்கூடாது. பல்லி வீட்டில் இருப்பதால் மகாலட்சுமி அம்சம் நிறைந்த வீடாக இருக்கும். சிலர் வீட்டில் ஒரு பல்லி கூட இருக்காது. அவ்வாறு பல்லி இல்லாத வீட்டில் பணம் கரைந்துக்கொண்டே போகும்.

புறா :-

புறா நம் வீட்டிற்குள் வந்தால் மிகவும் நல்லது. பறவையை வீட்டிற்குள் வருவதற்கு அவற்றிற்கு தினமும் தானியங்கள் கொடுத்தால் அவைகள் நம் வீட்டற்கு வரும்.

காகம் :-

காகம் நம் முன்னோர்களின் அடையாளமாக கூறுகிறார்கள். காகங்கள் கரைந்தால் பல சகுனங்கள் இருக்கிறது. நம் வீடு தேடி காகங்கள் வந்து கரைந்தால் நாம் உடனே உணவு வைக்க வேண்டும். நம் வீட்டிற்கு நற் செய்திகள் வந்தாலும் காகம் அதை தெரிவிக்க பல முறை நம் வீட்டிற்கு வந்து கரையும். காலையில் காகம் சத்தம் கேட்டு எழுந்தால் நமக்கு நினைத்த காரியம் வெற்றியாக நடக்கும்.

கிளி, பொண்வண்டு, தட்டாம்பூச்சி, வண்ணத்துப்பூச்சி, குளவி போன்றவைகள் வீட்டிற்குள் வந்தால் நல்லது.

அதிர்ஷ்டம் இல்லாத உயிரினங்கள் :-

பூரான், பாம்பு, தேள் போன்ற விஷம் இருக்கும் உயிரினங்கள் வீட்டிற்குள் நுழைந்தால் நமக்கு துரதிர்ஷ்டம் ஏற்படும். அவை வந்தால் வீட்டிற்குள் கெட்ட செய்தி நடக்க போகிறது என்பதை உணர்த்துகிறது.

குரங்கு :-

குரங்கு வீட்டற்குள் நுழைந்தால், தீங்கு தரக்கூடிய எதிரிகள் நம் அருகில் இருப்பதாக அர்த்தம்.

கரையான் :-

கரையான் நம் வீட்டிற்குள் நுழைந்தால் துரதிஷ்டம் தான். நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டம், பணப்பிரச்சனை போன்றவை உண்டாக போவதாக அர்த்தம்.

ஆமை :-

ஆமை வீட்டிற்குள் நுழைந்தால் துரதிஷ்டம் உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *